இந்து இயக்கங்கள் சார்பில் கம்யூனிஸ்டுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நீதிக்காக குரல் என்ற பெயரில் இந்து இயக்கங்கள் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி,
கேரளாவில் பல வருடங்களாக இந்து இயக்கங்கள் மீது கம்யூனிஸ்டு கட்சியினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபடுவதாகவும் இதை கண்டித்தும் நீதிக்காக குரல் என்ற பெயரில் இந்து இயக்கங்கள் சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுவை அண்ணா சிலை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினர். இளைஞர் அணி தேசிய செயலாளர் முருகானந்தம், விழுப்புரம் மாவட்ட தலைவர் பாலு, பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் தலைவர் கேசவலு ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி தலைவர் சனில்குமார், பொதுச்செயலாளர் முருகையன், ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்பாளர் கார்த்திகேயன், பாரதீய ஜனதா கட்சியின் புதுவை மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story