கிளியனூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


கிளியனூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 2:35 AM IST)
t-max-icont-min-icon

கிளியனூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் பா.ம.க.வினர் 100 பேர் கைது

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் மெயின்ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக கூறி, கிளியனூர் ஒன்றிய பா.ம.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வடிவேல் ராவணன், கருணாநிதி, தர்மன் ஆகியோர் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் முத்துக்குமார், ராமலிங்கம், பிரபு, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், முத்து, குமார், அசோக், சங்கர் உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு, டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கோ‌ஷமிட்டனர்.

இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பா.ம.க.வினர் 100 பேரை கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையிலான போலீசார் செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story