எடியூரப்பா, நாடு கண்ட மிகப்பெரிய ஊழல்வாதி சித்தராமையா கடும் தாக்கு
கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று பெங்களுரு விதான சவுதாவுக்கு வந்த சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பெங்களூரு,
கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று பெங்களுரு விதான சவுதாவுக்கு வந்த சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதா எங்கள் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறது. உண்மை இல்லாத குற்றச்சாட்டுகளை எடியூரப்பா கூறுகிறார். எங்கள் கட்சியை சேர்ந்த கோவிந்தராஜ் எம்.எல்.சி., கன்னட தொலைக்காட்சிகளில் வெளியான குறிப்பேடோ அல்லது அதில் எழுதப்பட்டுள்ள கையெழுத்தோ தன்னுடையது இல்லை என்று கூறியுள்ளார். போலி குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ள விவரங்களை வைத்து எங்கள் கட்சியினரை எடியூரப்பா குறை கூறுகிறார். இது ஏற்புடையது அல்ல. எங்கள் அரசின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எடியூரப்பா பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார். இது சரியல்ல.
பா.ஜனதாவை சேர்ந்த லெகர்சிங் பெயரில் வெளியான குறிப்பேட்டை தங்களுடையது இல்லை என்று அக்கட்சியினர் கூறுகிறார்கள். அதே போல் தான் கோவிந்தராஜ் எம்.எல்.சி.யும் சொல்கிறார். இரும்பு மேம்பாலம் அமைக்கும் திட்டத்தில் ரூ.65 கோடி நான் லஞ்சம் வாங்கியதாக எடியூரப்பா சொல்கிறார். அவரே நாடு கண்ட மிகப்பெரிய ஊழல்வாதி. அவ்வாறு இருக்கும்போது அவர் என்னை குறை சொல்ல முடியுமா?.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story