செங்குன்றத்தில் வணிக வளாகம் இடித்து அகற்றம் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நடவடிக்கை
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து செங்குன்றத்தில் உள்ள வணிக வளாகத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர்.
செங்குன்றம்,

ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் ராஜப்பா. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. செங்குன்றத்தில் இவர்களுக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. 5,600 சதுர அடி கொண்ட இந்த வணிக வளாகத்தின் தரைதளத்தில் பல்பொருள் அங்காடியும், மேல் தளத்தில் வீட்டு உபயோகப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த வணிக வளாகம் அருகில் வசிக்கும் தயாளன் என்பவர், தனது நிலத்தை ஆக்கிரமித்து இந்த வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளதாகவும், உரிய கட்டிட அனுமதி பெறவில்லை எனவும் சென்னை ஐகோர்ட்டில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, வணிக வளாகத்துக்கு ‘சீல்’ வைக்க உத்தரவிட்டது.
வணிக வளாகம் இடிப்பு
அப்போது ராஜப்பா, கடையின் உள்ளே இருக்கும் பொருட்களை எடுக்க கால அவகாசம் கேட்டார். ஆனால் கால அவகாசம் முடிந்தும் அவர் பொருட்களை எடுக்காமல் தொடர்ந்து கடையை நடத்தி வந்தார். இதையடுத்து தயாளன், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அந்த வணிக வளாகத்தை இடிக்கும்படி உத்தரவிட்டனர். அதன்பேரில் நேற்று காலை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சி.எம்.டி.ஏ). திட்ட துணை அலுவலர் சாந்தசுதா, பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த வணிக வளாகத்தை இடித்தனர்.
அப்போது திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குனர் செந்தில்குமார், மாதவரம் தாசில்தார் முருகானந்தம், பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் கருணாகரன், புழல் வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். இதையொட்டி மாதவரம் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் செங்குன்றம் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story