மும்பை மாநகராட்சி மேயர் பதவியை சிவசேனா கைப்பற்றினால் மகிழ்ச்சி அடைவேன் நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் சொல்கிறார்


மும்பை மாநகராட்சி மேயர் பதவியை சிவசேனா கைப்பற்றினால் மகிழ்ச்சி அடைவேன் நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் சொல்கிறார்
x
தினத்தந்தி 2 March 2017 3:20 AM IST (Updated: 2 March 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி மேயர் பதவியை சிவசேனா கைப்பற்றினால் மகிழ்ச்சி அடைவேன் என நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் பாலா நந்த்காவோங்கர் கூறியுள்ளார்.

மும்பை,

மும்பை மாநகராட்சி மேயர் பதவியை சிவசேனா கைப்பற்றினால் மகிழ்ச்சி அடைவேன் என நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் பாலா நந்த்காவோங்கர் கூறியுள்ளார்.

மேயர் பதவி யாருக்கு?

மும்பை மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் 21–ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதிகபட்சமாக சிவசேனாவிற்கு 84 வார்டுகள் கிடைத்தன. மேலும் 5 சுயேச்சைகளின் ஆதரவும் அக்கட்சிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. பா.ஜனதா 82 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எனவே மேயர் பதவியை யார் கைப்பற்றுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நவநிர்மாண் சேனாவின் மூத்த தலைவர் பாலா நந்த்காவோங்கர் நேற்று புனேயில் நடந்த கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது மும்பை மாநகராட்சியை எந்த கட்சி கைப்பற்றும் என நிருபர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:–

சிவசேனாவிற்கு ஆதரவு?

மும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்றினால் மகிழ்ச்சி அடைவேன். மராத்தியர்களின் நலன் கருதி நாங்கள் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்போம். ஆனால் இதற்கான இறுதி முடிவை கட்சி தலைவர் ராஜ் தாக்கரே தான் எடுப்பார். அவரின் முடிவும் மராத்தியர்களின் நலன் சார்ந்தே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பதிலின் மூலம் சிவசேனா மும்பை மாநகராட்சியை கைப்பற்ற நவநிர்மாண் சேனா ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவநிர்மாண் சேனா வசம் 7 கவுன்சிலர்கள் உள்ளனர்.


Next Story