பூங்காவில் பேசிக் கொண்டு இருந்த போது தகராறு நண்பரை அடித்து கொலை செய்த வாலிபர் கைது
மலாடில் நண்பரை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,

வாலிபர் பலி
மும்பை மலாடு மேற்கு, மார்வே பகுதியில் உள்ள எம்.வி. தேசாய் பூங்காவில் 2 பேர் தகராறு செய்துகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் பூங்காவில் இருந்து ஒருவர் தப்பிஓடினார். அவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து போலீசார் பூங்காவிற்குள் சென்று பார்த்தபோது, ரத்த காயங்களுடன் ஒருவர் மயங்கி கிடந்தார்.
உடனடியாக போலீசார் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
நண்பர் கைது
இதையடுத்து பூங்காவில் இருந்து தப்பிஓட முயன்றவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர் மலாடு பகுதியை சேர்ந்த ஜாபர் கான்(வயது26) என்பதும், பலியானவர் அவரது நண்பர் சூரியவன்சி(25) என்பதும் தெரியவந்தது.
2 பேரும் சம்பவத்தன்று பூங்காவில் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த ஜாபர்கான், சூரியவன்சியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சூரியவன்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜாபர் கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story