சமையல் கழிவுகளை உரமாக்கும் எந்திரம்
நாம் காய்கறி மற்றும் சமையல்- உணவுக் கழிவுகளை குப்பையில் கொட்டி வருகிறோம். அவை சுகாதார சீர்கேட்டிற்கு காரணமாக அமைகிறது.
இதை தவிர்த்து, கழிவுகளை வீட்டிலேயே உரமாக்கி பயன்படுத்தும் வகையில் ஒரு சிறிய எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மண்ணில் கொட்டினால்கூட பல நாட்கள் இயற்கை செயல்பாட்டிற்குப் பிறகுதான் இவை மட்கவும், உரமாகவும் செய்கிறது. ஆனால் இந்த அற்புத எந்திரம் ஒரே நாளிலேயே கழிவுகளை உரமாக்கி கொடுத்துவிடுகிறது.
ஜெரா என்ற நிறுவனம் வேர்ல்பூல் நிறுவனத்துடன் இணைத்து ‘ஜெரா புட் ரீசைக்ளர்’ என்ற பெயரில் இந்த எந்திரத்தை தயாரித்துள்ளது. சிறிய குடும்பத்திற்கான ஒரு வார கழிவுகளை சேகரிக்கும் கொள்ளளவு கொண்டது இந்த எந்திரம். கழிவுகளை நன்கு அழுத்தியும், நகரும் பிளேடுகளால் வெட்டி துகள்களாக்கியும் குறுகிய இடத்திற்குள் அடக்கிவிடும். பின்னர் பேக்கிங் சோடா, தேங்காய் நார் உள்ளிட்ட பொருட்களுடன் நுண்ணுயிர்கள் சேர்க்கப்பட்ட துணைப் பொருட்களை இந்த எந்திரத்திற்குள் கொட்டினால் அடுத்த 24 மணி நேரத்தில் உரம் தயாராகிவிடுகிறது.
இப்படி மாற்றப்பட்ட உரம், எந்திரத்தின் அடிப்பரப்பில் தனிப்பகுதியில் சேகரமாகிவிடும். அதை தனியே பிரித்து எடுக்கலாம். இதற்கான வடிகட்டிகள் மற்றும் உரம் தயாரிக்க உதவும் கூட்டுப்பொருள் பாக்கெட்டுகளை மட்டும் அவ்வப்போது தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ள வேண்டும். இண்டியகோகோ நிறுவனம் இந்த சாதனத்தை விற்பனைக்கு கொண்டு வருகிறது. விலை 1199 அமெரிக்க டாலர்கள்.

Next Story