தொலைவில் இருந்து அடுப்பை அணைக்கும் கருவி
“சமையல் அறையில் கியாஸ் பர்னரை அணைத்துவிட்டோமா, இல்லையா?” வீட்டைவிட்டு கிளம்பியதும் பல இல்லத்தரசிகளுக்கு வரும் சந்தேக கேள்வி இது.
பலநேரங்களில் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இந்தக் கேள்விக்கு தீர்வாக வந்துள்ளது ஒரு அப்ளிகேசன். இதன் மூலம் பர்னர் ‘ஆனில்’ இருப்பதை அறிந்தால் எங்கிருந்தபடியும் அதை அணைக்க கட்டளை கொடுக்க முடியும். தானியங்கி முறையிலும் பர்னரை அணைக்கும் படியும் இதில் பதிவு செய்து வைக்கலாம்.
‘இனிஆர்வி ரியாக்ட்’ என்ற நிறுவனம் இதற்கான கருவியை வடிவமைத்துள்ளது. பர்னரை இயக்கும் கைப்பிடியின் மீது பொருத்தக்கூடிய சிறப்பு குமிழை இவர்கள் வடிவமைத்துள்ளனர். இந்த குமிழ்களை எந்தவிதமான பர்னர்களின் மீதும் இணைத்து பொருத்திவிடலாம். பின்னர் இதனுடன் இணைப்புள்ள சிறிய பேட்ஜ் வடிவ கருவியை சமையல் அறையில் பொருத்திவிட வேண்டும். இவை இரண்டும் வை-பை மூலம் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். அத்துடன் இதற்கான சிறப்பு அப்ளிகேசனை ஸ்மார்ட்போனில் நிறுவிக் கொள்ள வேண்டும்.
இதைச் செய்துவிட்டால் சமையல் அறை விபத்துகளை பெருமளவு கட்டுப்படுத்திவிடலாம். வீட்டைவிட்டு கிளம்பிய பின்னரும் அப்ளிகேசன் உதவியுடன் பர்னரை அணைக்க முடியும். இதில் கியாஸ் கசிவை உணரும் சென்சார்களும் இருக்கின்றன. எனவே தீ அதிகமாக எரிந்தாலோ அல்லது தீப்பிடிக்கும் விதமாக கியாஸ் கசிவு மற்றும் இதர சூழல்கள் அறியப்பட்டாலோ பர்னர்கள் தானாகவே அணைந்துவிடும். 15 நிமிடங்களுக்கு மேல் எந்தவித மாறுதலும் இன்றி பர்னர் எரிந்து கொண்டிருந்தாலும் தானாக அணைந்து விடும் வகையிலும் ஒரு வசதி இருக்கிறது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் 3½ லட்சம் தீவிபத்துகள் நடக்கிறதாம். இதில் 13 ஆயிரம் பேர் காயம் அடைகிறர்களாம். தினமும் 7 பேர் சமையல் அறை தீவிபத்துகளால் உயிரிழக்கிறார்களாம். இந்த பாதிப்புகளை தடுக்க இந்த கருவி பெரிதும் துணைபுரியும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள். கிக்ஸ்டார்ட்டர் நிறுவனம் இதை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. விலை 299 அமெரிக்க டாலர்கள்.

Next Story