போலீசாருக்கு தெரியாமல் தற்கொலை செய்த பெண் உடல் எரிப்பு கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு


போலீசாருக்கு தெரியாமல் தற்கொலை செய்த பெண் உடல் எரிப்பு கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 2 March 2017 10:30 PM GMT (Updated: 2017-03-02T18:49:27+05:30)

காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை அருகே உள்ள மணியம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா(வயது 27).

காரைக்குடி,

காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை அருகே உள்ள மணியம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா(வயது 27). இவரது மனைவி ஜெயா(25). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஜெயா, சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், கருப்பையாவும், இரவது உறவினர்களும் ஜெயா உடலை எரித்து விட்டனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் நவீனா, சாக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை எரித்த கருப்பையா, இவரது உறவினர்கள் உய்யவந்தாள்(53), லட்சுமணன்(34), சுப்பையா(46), ராமு(36) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் ஜெயாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் மட்டுமே ஆவதால், இந்த சம்பவம் குறித்து சப்–கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.


Next Story