பாதிக்கப்பட்ட விவசாயிகள் வறட்சி நிவாரணத்தொகை பெற உரிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் தாசில்தார் வேண்டுகோள்


பாதிக்கப்பட்ட விவசாயிகள் வறட்சி நிவாரணத்தொகை பெற உரிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் தாசில்தார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 6:53 PM IST)
t-max-icont-min-icon

பாதிக்கப்பட்ட விவசாயிகள் வறட்சி நிவாரணத்தொகை பெற உரிய ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும

தொண்டி,

கணக்கெடுக்கும் பணி

திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க கணக்கெடுக்கும் பணிகள் மாவட்ட கலெக்டர் நடராஜன் உத்தரவின் பேரில் கடந்த 1½ மாதமாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மார்ச் 1–ந்தேதி முதல் வறட்சி நிவாரணத் தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி திருவாடானை தாலுகாவில் மட்டும் சுமார் 65 ஆயிரம் விவசாயிகள் வறட்சி நிவாரண தொகையை பெற உள்ளனர். இதற்காக விவசாயிகள் தங்களது ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண் போன்ற விவரங்கள், உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலரிடம் வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதனை தொடர்ந்து பெரும்பாலான விவசாயிகள் தங்களது வங்கி கணக்கு போன்ற விவரங்களை வழங்கி உள்ளனர். ஆனால் விவசாயிகள் வழங்கியுள்ள வங்கி கணக்குகளை சம்பந்தப்பட்ட வங்கிகளில் சரிபார்க்கும் போது வேறுபட்டு உள்ளது. இதனால் இந்த பணியை விரைந்து முடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

வேண்டுகோள்

எனவே திருவாடானை தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் உடனடியாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் சென்று ஏற்கனவே வழங்கி உள்ள ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்றவை சரியாக உள்ளனவா? என்பதை சரிபார்த்துக் கொள்ளவேண்டும். மேலும் ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்றவற்றை இதுவரை வழங்காதவர்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்று திருவாடானை தாசில்தார் தாமஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Next Story