மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை
கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்க தினமான சாம்பல் புதனையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
தர்மபுரி,
கிறிஸ்தவர்களின் தவக்கால தொடக்க தினமான சாம்பல் புதனையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதையொட்டி தர்மபுரி தூய இருதய ஆண்டவர் தேவலாயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையை தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தொடங்கி வைத்தார். பங்குத்தந்தை மதலைமுத்து, ஆயரின் செயலாளர் அருள் ரெசாரியோ, உதவி பங்குத்தந்தை ஸ்டாலின் ஆகியோர் பிரார்த்தனையை முன்னின்று நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசி ஆசிர்வாதம் அளிக்கப்பட்டது. இதேபோல் கோவிலூரில் உள்ள தேவாலயத்தில் பங்குத்தந்தை அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கேத்தனஅள்ளி திருஇருதய ஆண்டவர் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையை பங்குத்தந்தை சூசைராஜ் நடத்தி வைத்தார். தும்பலஅள்ளி அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில் பாதிரியார் சூசைராஜூம், சாவடியூர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் மற்றும் பாலக்கோடு கிறிஸ்து அரசர் தேவாலயம் ஆகியவற்றில் பாதிரியார் இருதயநாதனும் சிறப்பு பிரார்த்தனையை முன்னின்று நடத்தினார்கள். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடந்த சாம்பல் தின சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.