தாயாருக்கு வழங்கப்பட்ட கருணை வேலையை தனக்கு வழங்கக் கோரி பெண் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

தாயாருக்கு வழங்கப்பட்ட கருணை வேலையை தனக்கு வழங்கக் கோரி பெண் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 7:38 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி என்ற பெண் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது–

மதுரை,

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி என்ற பெண் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது–

எனது தந்தை போலீஸ்காரராக பணியாற்றினார். இந்த நிலையில் அவர் கடந்த 26.10.2014–ல் இறந்து போனார். பணியில் இருந்தபோது அவர் இறந்ததால் கருணை வேலை வழங்க கோரி விண்ணப்பித்தோம். அதன்படி எனது தாயாருக்கு கருணை அடிப்படையில் வேலை கிடைத்தது. ஆனால் எனது தாயாருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவின் காரணமாக அந்த வேலையில் சேர முடியாமல் போனது. எனவே எனது தாயாருக்கு வழங்கப்பட்ட அந்தவேலையை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி, கருணை அடிப்படையில் தாயாருக்கு வழங்கப்பட்ட வேலையை அவரின் மகளுக்கு வழங்க முடியாது. மனுதாரரின் தாயார், ஒரு மாதத்திற்குள் அந்த வேலையில் சேர வேண்டும் என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story