பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் உண்டியல் மூலம் ரூ.3 லட்சத்து 78 ஆயிரம் வருமானம்
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 4 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த 4 உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த உண்டியல்கள் எண்ணும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன் நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
உண்டியலில் ரூ.3 லட்சத்து 78 ஆயிரத்து 470 இருந்தது. இந்த பணியில் பொள்ளாச்சி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் புவனேஷ்வரி, கோவில் செயல் அலுவலர் ஜெயசெல்வம், பரம்பரை அறங்காவலரின் உதவியாளர் சண்முகவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story