வாகன விபத்து ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்


வாகன விபத்து ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றம்
x
தினத்தந்தி 3 March 2017 2:30 AM IST (Updated: 2 March 2017 8:25 PM IST)
t-max-icont-min-icon

வாகன விபத்து ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் திட்டத்தை திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளி பிரியா தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

வாகன விபத்து ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் திட்டத்தை திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளி பிரியா தொடங்கி வைத்தார்.

புகார் மனுக்கள் ஆன்லைனில் பதிவேற்றம்

தமிழகத்தில் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை ஆன்லைனில் பதிவேற்றும் நடைமுறை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீதான வழக்குப்பதிவு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

குற்றம், குற்றப்பின்னணி கண்டறியும் வலைப்பின்னல் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு வழக்கின் விபரம், குற்றவாளிகளின் முழு தகவல், விபத்து, தற்கொலை, கொலை போன்றவற்றில் தகவல்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதனை எந்த இடத்தில் இருந்தும் கண்காணிக்கும் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துக்கள் தொடர்பான ஆவணங்கள்

இந்த நிலையில் வாகன விபத்துகள் தொடர்பான ஆவணங்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை கிழக்கு, வெறையூர், களம்பூர், கீழ்பென்னாத்தூர் ஆகிய 4 போலீஸ் நிலையங்களில் முதற்கட்டமாக வாகன விபத்துகள் தொடர்பான ஆவணங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் நிலையத்தில் வாகன விபத்து வழக்குகளின் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் திட்டத்தை திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளி பிரியா தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் இத்திட்டம் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இழப்பீடு எளிதில் பெற...

வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு எளிதில் பெற இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன விபத்து தொடர்பான மனு, மாதிரி வரைப்படம், பதிவு சான்றிதழ், வாகன ஓட்டுனர் உரிமம், வாகன அனுமதி சான்று, காப்பீட்டு சான்று, பாதிக்கப்பட்ட நபரின் சிகிச்சை விபரம் போன்றவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.


Next Story