தாராபுரம் அருகே சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


தாராபுரம் அருகே சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 2 March 2017 10:05 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே உள்ள கிராமப்புறங்களில் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

அலங்கியம்,

சீமை கருவேல மரங்கள்

சீமை கருவேல மரங்களை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. மதுரை உயர்நீதி மன்ற கிளையும் இந்த மரங்களை அழிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மாவட்ட கிளை நீதிமன்றங்களும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு சம்பந்தமாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் சீமை கருவேல மரங்கள் ஒழிப்பு நடவடிக்கையில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தாராபுரத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் ஒழிப்புக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பொதுமக்கள் கோரிக்கை

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:– தாராபுரம் நகராட்சி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சீமை கருவேல மரங்களை வீட்டின் உரிமையாளர்களே அகற்றிக்கொள்ள வேண்டும் என நகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கிராமப்புறங்களில் குறிப்பாக உப்பாறு அணை, தளவாய்பட்டணம், கோவிந்தாபுரம், அலங்கியம், கொளத்துப்பாளையம், மணக்கடவு உட்பட பல்வேறு பகுதிகளில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டால் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே வறட்சிப்பகுதியான தாராபுரம் பகுதியில் பெருகி வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களால் நிலத்தடி நீர்மட்டம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகம் தாராபுரம் பகுதியை ஆக்கிரமித்து உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்’’ என்று கூறினர்.


Next Story