நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 8,344 பேர் எழுதினர்


நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வை 8,344 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 2 March 2017 10:16 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் நேற்று பிளஸ்–2 பொதுத்தேர்வை 8 ஆயிரத்து 344 பேர் எழுதினர்.

ஊட்டி,

பிளஸ்–2 பொதுத்தேர்வு

தமிழகம் முழுவதும் நேற்று பிளஸ்–2 பொதுத்தேர்வு தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு எழுத 8 ஆயிரத்து 446 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாணவர்கள் 3 ஆயிரத்து 782 பேரும், மாணவிகள் 4 ஆயிரத்து 664 பேரும் அடங்கும்.

நீலகிரி முழுவதும் மொத்தம் 35 தேர்வு மையங்களில் நேற்று நடைபெற்ற தேர்வை 8 ஆயிரத்து 344 மாணவ–மாணவிகள் எழுதினார்கள். மேலும் இந்த தேர்வை 102 பேர் எழுத வரவில்லை. மாணவ–மாணவிகள் காப்பி அடிப்பதை தடுக்க 92 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.

கலெக்டர் ஆய்வு

ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் நடைபெற்ற பொதுத்தேர்வை கலெக்டர் சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:–

நேற்று தொடங்கிய பிளஸ்–2 தேர்வை 8 ஆயிரத்து 344 பேர் எழுதினர். இதில் தமிழ்பாடத்தை 7 ஆயிரத்து 56 மாணவர்களும், மலையாள பாடத்தை 663 பேரும், பிரெஞ்சு பாடத்தை 444 பேரும், இந்தி பாடத்தை 181 பேரும் எழுதினர்.

தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story