பத்ராவதி நகரசபை கூட்டம் தலைவி ஹாலம்மா தலைமையில் நடந்தது
பத்ராவதி நகரசபை கூட்டம், நகரசபை தலைவி ஹாலம்மா தலைமையில் நடந்தது.
பத்ராவதி,
பத்ராவதி நகரசபை கூட்டம், நகரசபை தலைவி ஹாலம்மா தலைமையில் நடந்தது.
நகரசபை கூட்டம்பத்ராவதி நகரசபை மாதாந்திர நகரசபை கூட்டம் நேற்று நகரசபை கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவி ஹாலம்மா தலைமை தாங்கி கூட்டத்தை தொடங்கி வைத்தார்.
கூட்டம் தொடங்கியவுடன் உறுப்பினர் வெங்கடய்யா எழுந்து பேசினார். அவர் பேசுகையில், நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கும் குறைந்தபட்ச மாதாந்திர கட்டணமாக ரூ.240 நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. இது ஏழைகளுக்கு பெரும் சுமையாக இருக்கும். அதனால் ஒவ்வொரு குடிநீர் இணைப்புக்கும் இனிமேல் குறைந்தபட்ச மாதாந்திர கட்டணமாக ரூ.120 நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதையே வசூலிக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறியதை மற்ற உறுப்பினர்களும் வழிமொழிந்தனர்.
குறைந்தபட்ச மாதாந்திர கட்டணம்அதற்கு பதில் அளித்து பேசிய நகரசபை கமிஷனர் நாகராஜ், குடிநீர் இணைப்புக்கு மாதாந்திர குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.120–ஆக குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், சமூக, சமுதாய சங்கங்கள் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு சங்கம் அல்லது கட்சி அலுவலகம் கட்டிக்கொள்ள நகரசபை வாயிலாக இடம் ஒதுக்கி தரப்பட்டது. கடந்த காலத்தில் பத்ராவதி நகரில் எம்.எல்.ஏ.வாக இருந்த அன்வர் குத்தூஸ், பிரஜா பிரபு சோசலிஸ்ட் பார்டி என்ற கட்சியை தொடங்கினார். அவர் கட்சி அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கி தருமாறு நகரசபையிடம் கேட்டிருந்தார். அதன்படி அவருக்கு இடம் ஒதுக்கி தரப்பட்டது. தற்போது அந்த இடத்தை அவருடைய மகன் அஸ்வத் பாஷா தனது பெயருக்கு பட்டா–சிட்டா மாற்றித் தரும்படி கோரி நகரசபையில் விண்ணப்பித்துள்ளார். அவருடைய கோரிக்கையை எப்படி பரிசீலிப்பது என்று பேசினார்.
ரூ.10 கோடி நிதிகமிஷனர் பேசியதற்கு பதில் அளித்து பேசிய உறுப்பினர்கள், அஸ்வத் பாஷாவின் கோரிக்கையை நிறைவேற்ற சட்டத்தில் இடம் இருக்குமேயனால் அதை செய்து கொடுக்கலாம் என்று ஒப்புதல் வழங்கினர்.
அதன்பின் பேசிய சில உறுப்பினர்கள், நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. அதை போக்க வேண்டும். மேலும் அம்பேத்கர் பவனம் கட்டுவதற்காக சமூக நலத்துறையால் ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் அம்பேத்கர் பவனம் கட்டுவதற்கு நகரசபை இடம் ஒதுக்கி தரவேண்டும். அம்பேத்கர் பவன் கட்டுவதற்கு பழைய நகரில் உள்ள கல்வித்துறை அலுவலகம் அருகே இடம் ஒதுக்கினால் நன்றாக இருக்கும் என்று பேசினர்.
பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுஉறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நகரசபை தலைவி அதற்கு ஒப்புதல் அளித்தார். அதையடுத்து உறுப்பினர் செல்லப்பா பேசும்போது, வீட்டு வரி செலுத்த காலதாமதம் ஆனால் 2 சதவீத அபராதத்துடன், வரி பாக்கி வசூலிக்கப்படுகிறது. அது ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு சுமையாக இருக்கும். அதனால் அதை 2 சதவீதத்தில் இருந்து 1 சதவீதமாக குறைத்து வசூலிக்க வேண்டும் என்று பேசினார்.
அதுகுறித்து பரிசீலனை செய்து முடிவு எடுப்பதாக நகரசபை தலைவி ஹாலம்மா கூறினார். அதையடுத்து கூட்டத்தில் பல்வேறு திட்டங்கள், வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், நகரசபை துணைத்தலைவி மகாதேவி, அப்பாஜி எம்.எல்.ஏ., முன்னாள் நகரசபை தலைவி விசாலாட்சி, நகரசபை உறுப்பினர்கள் சென்னப்பா, மணி, குணசேகரன் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.