ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார் கவர்னர், முதல்-அமைச்சர் வரவேற்றனர்


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார் கவர்னர், முதல்-அமைச்சர் வரவேற்றனர்
x
தினத்தந்தி 3 March 2017 4:30 AM IST (Updated: 3 March 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னைக்கு நேற்று வந்தார். அவரை விமான நிலையத்தில் கவர்னர், முதல்-அமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னை,

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொச்சியில் இருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவரை தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், முப்படை தளபதிகள், தலைமைச்செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். வரவேற்பு முடிந்த பின்னர் ஜனாதிபதி கிண்டி கவர்னர் மாளிகைக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

தாம்பரம் விமானப்படை தளத்தில் விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி இன்று (வெள்ளிக்கிழமை) காலை கலந்து கொண்டு விட்டு அடையாறு செல்கிறார். அங்கு இந்திய பெண்கள் சங்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்க உள்ளார்.

அந்த விழாவை முடித்துக்கொண்டு மதியம் 1 மணிக்கு மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார். பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு அவர் செல்கிறார்.


Next Story