தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி கல்லூரி மாணவி உள்பட 10 பேர் கைது
நெடுவாசல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற கல்லூரி மாணவி உள்பட 10 பேர் தஞ்சையில் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்,
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் இளைஞர் இயக்கம், மாணவர் இயக்கம் சார்பில் நெடுவாசலில் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு தடை விதிக்கக்கோரியும் தஞ்சை ரெயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.
10 பேர் கைது
ஆனால் இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து தடையை மீறி போராட்டம் நடைபெறும் என இளைஞர் இயக்கம், மாணவர் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தஞ்சை ரெயில்வே கீழ்பாலம் அருகில் இருந்து இளைஞர் இயக்க மாநில பொதுச்செயலாளர் அருண்சோரி, மாணவர் இயக்க பொதுச்செயலாளர் பிரபாகரன் ஆகியோர் தலைமையில் 10 பேர் ஊர்வலமாக வந்தனர்.
அவர்கள் ரெயில் நிலையம் அருகே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இதில் அருண்சோரி, பிரபாகரன், கார்த்திக், மதன், கபாலி, கல்லூரி மாணவி தமிழ்மொழி, ரவிச்சந்திரன், இன்னொரு கார்த்திக், கண்மணி, கங்காதரன் ஆகிய 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.

Next Story