ரூ.47½ கோடி செலவில் ஊசுட்டேரி குடிநீர் திட்டப் பணிகள் தொடக்கம் நாராயணசாமி தொடங்கி வைத்தார்
ஊசுட்டேரியில் இருந்து புதுச்சேரி நகருக்கு ரூ.47½ கோடி செலவில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தின் முதல்கட்டப் பணியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
வில்லியனூர்,
புதுச்சேரி நகரின் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ஊசுட்டேரியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை அரசு தயாரித்துள்ளது. சுமார் 47½ கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஊசுட்டேரி அருகில் உள்ள பொறையூர் பள்ளம் வாய்க்காலில் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சுவாமி நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்கட்ட பணிகளை முதல்- அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். இந்த முதல் கட்ட பணியில் ஊசுட்டேரியில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை சேகரித்து வைக்க ராட்சத தொட்டி, இங்கிருந்து முத்திரையர்பாளையத்தில் உள்ள குடிநீர் நிலையத்துக்கு சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய்கள் பதித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மொத்தம் 14 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவில் இந்த முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிகள் முடிந்ததும் அடுத்தகட்ட பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாராயணசாமி பேட்டி
திட்டப் பணிகளை தொடங்கி வைத்தபின் முதல்-அமைச்சர் நாராயணசாமி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற கூட்டத்தின்போது, புதுவை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஊசுட்டேரியில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் கோரிக்கை விடுத்து பேசினார். அதை ஏற்று அமைச்சர் நமச்சிவாயம் பரிந்துரையின்பேரில் நபார்டு வங்கி நிதி உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.
அதனைத் தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினை அணுகி, ஒரு சில நிபந்தனைகளுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி பெற்றோம். அதைத்தொடர்ந்து மொத்தம் ரூ.47 கோடியே 47 லட்சம் செலவில் ஊசுட்டேரியில் இருந்து குடிநீர் எடுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. தினமும் 2 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படும்.
குடிநீர் தட்டுப்பாடே ஏற்படாது
இந்த திட்டத்தின் மூலம் புதுச்சேரி நகரப்பகுதியில் வசிக்கும் 1½ லட்சம் மக்களுக்கு தினமும் குடிநீர் வழங்க முடியும். ஊசுட்டேரியில் இருந்து கிடைக்கும் உபரிநீரை பயன்படுத்தியே இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஏரியின் குறைந்தபட்ச கொள்ளளவை பாதிக்கும் வகையில் அங்கிருந்து தண்ணீர் எடுக்கப்படமாட்டாது. இந்த திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் புதுச்சேரி நகரப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு என்ற நிலையே ஏற்படாது.
இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story