திருச்சி மாவட்டத்தில் 36 ஆயிரத்து 49 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. நேற்று 36 ஆயிரத்து 49 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். முறைகேடுகளை தடுக்க 219 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
திருச்சி,
பிளஸ்-2 தேர்வு
திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள 139 பள்ளிகளை சேர்ந்த 9,251 மாணவர்கள், 11,959 மாணவிகள் என மொத்தம் 21,210 பேர்களும், லால்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள 38 பள்ளிகளை சேர்ந்த 3,008 மாணவர்கள், 3,629 மாணவிகள் என மொத்தம் 6,637 பேர்களும், முசிறி கல்வி மாவட்டத்தில் உள்ள 54 பள்ளிகளை சேர்ந்த 3,996 மாணவர்கள், 4,329 மாணவிகள் என மொத்தம் 8,325 பேர்களும் தேர்வு எழுதுகிறார்கள். இதுதவிர 923 தனித்தேர்வாளர்களும் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மொத்தம் 101 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பறக்கும் படை
இத்தேர்வு மையங்களில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க நியமிக்கப்பட்ட 219 பறக்கும் படையினரும் ரோந்து சுற்றி கண்காணித்த வண்ணம் இருந்தனர். 118 முதன்மைக் கண்காணிப் பாளர்கள், 131 துறை அலுவலர்கள், 1,932 அறை கண் காணிப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 82 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 40 பார்வையற்றோரும் 40 ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினார்கள். இவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. நேற்று தமிழ் முதல் தாள் தேர்வில் 36 ஆயிரத்து 49 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். 213 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல தனித்தேர்வர்கள் 68 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங் களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேர்வு அறைக்கு மாணவ- மாணவிகள் செல்வதற்கு முன்பாக ஆசிரியர் களால் இறைவனை வேண்டி பிரார்த்தனை நடத்தப் பட்டது.

Next Story