ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை


ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 3 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் முற்றுகை

பொன்னமராவதி,

பொன்னமராவதி அருகே உள்ள வேகுப்பட்டி ஊராட்சியில் நூறு நாள் வேலை திட்ட பணியாளர்கள் சீமை கருவேல மரங்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று சீமை கருவேல மரங்களை வேரோடு வெட்ட வேண்டும் என பணியாளர்களுக்கு அதிகாரிகள் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு சென்ற அனைத்து பெண்களும் வேகுப்பட்டியில் இருந்து பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது. 

Next Story