அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் கசிவால் திடீர் தீ விபத்து
கும்மிடிப்பூண்டி அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துவ பொருட்கள் எரிந்து நாசமானது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி தாலுகா கண்ணன்கோட்டை கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. நேற்று பிற்பகல் மூடிக்கிடந்த இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனைக் கண்ட கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே பொருட்கள் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தேர்வாய் கண்டிகை சிப்காட் நிலைய தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்குள் தீயணைப்பு வண்டியில் இருந்த தண்ணீர் காலியாகி விட்டது.
இதற்கிடையில் தீ வேகமாக பரவி அந்த கட்டிடம் முழுவதும் பற்றி எரியத் தொடங்கியது. இதனைக்கண்ட உள்ளூர் மக்கள் தங்களது வீடுகளில் இருந்து குடங்களில் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிக வெப்பத்தால் அந்த கட்டிடத்தின் சுவர்களும் வெடித்து சேதம் அடைந்தன.
அந்த சமயத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 8 மணிக்கு சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வந்தது. பிறகு அதன் மூலம் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது.
மருத்துவபொருட்கள் நாசம்
இந்த தீ விபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த 20 பெட்டி நாப்கின் மற்றும் மருத்துவ பொருட்கள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தன.
மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story