காஞ்சீபுரம் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 445 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 445 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகின்றனர் என்று கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
காஞ்சீபுரம்,
2016-2017-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. காஞ்சீபுரத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு என 2 கல்வி மாவட்டங்கள் உள்ளன. பெரிய காஞ்சீபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு நடைபெறுவதை கலெக்டர் கஜலட்சுமி பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்:-
பிளஸ்-2 தேர்வு நடைபெறும் மையங்களில் தடையற்ற மின்சார வசதி, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 51 ஆயிரத்து 445 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பி.உஷா, தாசில்தார் கியூரி ஆகியோர் உடனிருந்தனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 47 ஆயிரத்து 46 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். நேற்று திருவள்ளூரில் உள்ள கவுடி மேல்நிலைப்பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வு நடைபெறுவதை கலெக்டர் சுந்தரவல்லி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது திருவள்ளூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர் முனுசாமி ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார். அப்போது அவருடன் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன், பள்ளி கல்வி துணை ஆய்வாளர் ராமமூர்த்தி, மாவட்ட கல்வி அதிகாரி லில்லிபுஷ்பம் ஆகியோர் உடனிருந்தனர்.
பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி கங்காதரரெட்டி நேற்று பொன்னேரி மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு மாணவிகள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டார்.

Next Story