கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கோவில்பட்டி,
கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் இருந்து, லாயல்மில் மேம்பாலம் வரையிலும் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. பெரும்பாலான கடைகளின் முன்புள்ள ஆக்கிரமிப்புகளை கடைக்காரர்களே அகற்றினர். சில கடைகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். தாசில்தார் ராஜ்குமார் தங்கசீலன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ஆன்ட்ரூஸ் மற்றும் பலர் இந்த பணியில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), ராஜேஷ் (மேற்கு) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story