தூத்துக்குடி மாவட்டத்தில் 22 ஆயிரம் பேர் பிளஸ்–2 தேர்வு எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில், 22 ஆயிரத்து 4 பேர் நேற்று பிளஸ்–2 தேர்வு எழுதினர்.
தூத்துக்குடி,
தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டத்தில் 181 பள்ளி கூடங்களை சேர்ந்த 9 ஆயிரத்து 518 மாணவர்கள், 12 ஆயிரத்து 1 மாணவிகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 519 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதினர். இது தவிர தனித்தேர்வர்கள் 485 பேரும் தேர்வு எழுதினர். இதில் மாற்றுத்திறனாளிகள் 16 பேர். இதற்காக மாவட்டம் முழுவதும் 65 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் 10 மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று மொழிப்பாடம்–1 வினாத்தாள்கள் 17 வழித்தட அலுவலர்கள் மூலம் நேற்று காலையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
கண்காணிப்பு
நேற்று காலை 10 மணிக்கு பிளஸ்–2 மொழிப்பாடம்–1 தேர்வு நடைபெற்றது. மாவட்டத்தில் சென்னை தொடக்க கல்வி இயக்கக துணை இயக்குனர் வசந்தி தலைமையில் தேர்வு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 150 ஆசிரியர்கள் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். அறை கண்காணிப்பாளராக 1,125 ஆசிரியர்களும், பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இது தவிர உதவி கலெக்டர்கள், தாசில்தார்கள் தலைமையிலான பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
கலெக்டர் ரவிகுமார் ஆய்வு
தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் உள்ள மையத்தில் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு குடிநீர் வசதி, தடையில்லா மின்சாரம், போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார். ஒழுங்கீன செயல்கள் நடக்காமல் கவனமுடன் செயல்படுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் செந்தூர்கனி(தூத்துக்குடி), சின்னராசு(கோவில்பட்டி) மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கோவில்பட்டி
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 20 மையங்களில் பிளஸ்–2 தேர்வு நேற்று தொடங்கியது. 3 ஆயிரத்து 288 மாணவர்களும், 4 ஆயிரத்து 112 மாணவிகளும், ஆக மொத்தம் 7 ஆயிரத்து 400 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுகிறவர்களை பிடிப்பதற்காக, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் சின்னராசு தலைமையில் 44 பறக்கும்படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story