தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி: ஆம் ஆத்மி கட்சியினர் 18 பேர் கைது


தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி: ஆம் ஆத்மி கட்சியினர் 18 பேர் கைது
x
தினத்தந்தி 3 March 2017 3:45 AM IST (Updated: 3 March 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி: ஆம் ஆத்மி கட்சியினர் 18 பேர் கைது

நாகர்கோவில்,


புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, குமரி மாவட்ட ஆம் ஆத்மி கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக நேற்று மாலையில் திரண்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த கோட்டார் போலீசார் அங்கு விரைந்து சென்று, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது என்று அவர்களிடம் கூறினர்.

ஆனால் போலீசாரின் தடையையும் மீறி அவர்கள்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார், ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 3 பெண்கள் உள்பட 18 பேரை கைது செய்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்டவர்கள் வடிவீஸ்வரம் பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டனர். இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Next Story