ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
மோளக்கவுண்டன்பாளையம் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
ஈரோடு,
ஈரோடு மோளக்கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்த 15 பேர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:–
எங்கள் பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் தனியார் 2 பேர் ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் அதன் அருகில் உள்ள மாநகராட்சி ஆழ்குழாய் கிணறு மற்றும் ஊர் பொதுக்கிணற்றில் தண்ணீர் வற்றுவதற்கு அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. எனவே ஊர் பொதுமக்களின் நலன் கருதி மேற்படி இடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து விற்பனை செய்யவோ? அல்லது வேறு காரணங்களுக்கு பயன்படுத்தவோ? தடை விதிக்கவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தார்கள்.

Next Story