மும்பையில் இளைஞர்களை கவர்ந்த சிவாஜிபார்க் ‘செல்பி பாயிண்ட்’ திடீரென மூடப்பட்டது
மும்பையில் இளைஞர்கள், பொதுமக்களை கவர்ந்த சிவாஜிபார்க் ‘செல்பி பாயிண்ட்’ திடீரென மூடப்பட்டது.
மும்பை,

செல்பி பாயிண்ட்
செல்போனில் தங்களை படம் பிடித்து பிறருடன் பகிர்ந்து கொள்ளும் ‘செல்பி’ மோகம் இன்றைய இளைய சமுதாயத்தை ஆட்டிப்படைக்கிறது. பிரபலங்களும் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். அந்த அளவுக்கு செல்பி மோகத்தில் மக்கள் மூழ்கி கிடக்கின்றனர்.
மக்களின் செல்பி ஆர்வத்தை கருத்தில் கொண்டு மும்பையில் முதன் முதலாக நவநிர்மாண் சேனா கவுன்சிலர் சந்திப் தேஷ்பாண்டே தனது வார்டுக்குட்பட்ட தாதர் சிவாஜிபார்க் மைதான நுழைவு வாயிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அலங்கார அமைப்புகளுடன் ‘செல்பி பாயிண்ட்’ அமைத்து கொடுத்தார். அந்த இடத்தில் தினசரி இளைஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
மூடப்பட்டது
இந்தநிலையில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் நவநிர்மாண் சேனா சார்பில் சந்திப் தேஷ்பாண்டேயின் மனைவி சுவப்னா போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினார். இந்த வார்டில் சிவசேனாவின் விசாகா ராவுத் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில், திடீரென சிவாஜிபார்க் மைதான நுழைவு வாயிலில் உள்ள ‘செல்பி பாயிண்ட்’ மூடப்படுவதாக சந்திப் தேஷ்பாண்டே அறிவித்தார். தனது சொந்த செலவில் அமைக்கப்பட்ட செல்பி பாயிண்டை பராமரிக்க வருடத்திற்கு ரூ.12 லட்சம் செலவு ஆவதாகவும், போதிய நிதி இன்மை காரணமாக, அது மூடப்பட்டதாகவும் கூறினார்.
இந்தநிலையில், அங்கு புதிய பொழிவுடன் பா.ஜனதா சார்பில் ‘செல்பி பாயிண்ட்’ ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று பா.ஜனதா மும்பை தலைவர் ஆஷிஸ் செலார் தெரிவித்து உள்ளார்.

Next Story