திருவண்ணாமலை பவுர்ணமி கோ–ஆப்டெக்சில் 2 வாங்கினால் ஒன்று இலவசம்
திருவண்ணாமலை பவுர்ணமி கோ–ஆப்டெக்சில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனையை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை பவுர்ணமி கோ–ஆப்டெக்சில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் சிறப்பு விற்பனையை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கி வைத்தார்.
சிறப்பு விற்பனை தொடக்கம்தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்க வேலூர் மண்டல அலுவலகம் சார்பில், திருவண்ணாமலை திருவூடல் தெருவில் உள்ள பவுர்ணமி கோ–ஆப்டெக்சில் 2 வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மண்டல மேலாளர் ரவி வரவேற்றார். இதில் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–
கோ–ஆப்டெக்சில் கைகுட்டை முதல் பட்டு சேலை வரை 2 வாங்கினால் ஒன்று இலவசம் என்ற திட்டம் கடந்த 2012–ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம் விற்பனையில் கடந்த 5 ஆண்டுகளாக சாதனை படைத்துள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 22–ந் தேதி முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ள இந்த திட்டம் வருகிற 28–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை செயல்படுத்தப்பட உள்ளது.
ரூ.57 லட்சம் விற்பனை செய்ய இலக்குஇத்திட்டத்திற்கென பிரத்யேகமான துணி வகைகள் வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் விற்பனை நடைபெறும்.
இதை தவிர ‘கனவு நனவு திட்டம்’ என்ற சேமிப்பு திட்டமும் கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் உள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.100, ரூ.200, ரூ.300 என ஏதாவது திட்டத்தில் சேர்ந்து 9 மாதங்கள் பணம் செலுத்தினால் 10–வது மாதம் கோ–ஆப்டெக்ஸ் தவணையை செலுத்தும். வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப துணி வகைகளை எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மேலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பவுர்ணமி கோ–ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் சு.ராஜேந்திரன் நன்றி கூறினார்.