குடியாத்தம் அருகே சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி சார்பு நீதிபதி பார்வையிட்டார்


குடியாத்தம் அருகே சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி சார்பு நீதிபதி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 4 March 2017 4:15 AM IST (Updated: 3 March 2017 10:07 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நீர்வளத்தை உறிஞ்சி எடுக்கும் சீமை கருவேல மரங்களை வேருடன் வெட்டி அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

குடியாத்தம்,

தமிழகத்தில் நீர்வளத்தை உறிஞ்சி எடுக்கும் சீமை கருவேல மரங்களை வேருடன் வெட்டி அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

குடியாத்தத்தை அடுத்த பாக்கம் பகுதியில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணியை குடியாத்தம் சார்பு நீதிபதி கே.தயாநிதி பார்வையிட்டார்.

அப்போது மாவட்ட உரிமையியல் நீதிபதி சி.செந்தில்குமார், மாஜிஸ்திரேட்டு கே.சந்திரகாசபூபதி, வருவாய் ஆய்வாளர் பலராமன், கிராம நிர்வாக அலுவலர் முத்துமாரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாரி மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story