ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 March 2017 4:15 AM IST (Updated: 4 March 2017 12:12 AM IST)
t-max-icont-min-icon

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களாக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது. இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியது போல நெடுவாசல் கிராமமக்களுக்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தவேண்டும் என சமூக வலைதளங்களில் மாணவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் நாகை புத்தூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவ–மாணவிகள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஆறு.பிரகாஷ், மாவட்ட தலைவர் ஜோதிபாஸ் ஆகியோர் பேசினர். இதில் கல்லூரி நிர்வாகிகள் விஜயேந்திரன், சிவநேசன், மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீதர் உள்பட கல்லூரி மாணவ–மாணவிகள் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர்.


Next Story