மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம்
x
தினத்தந்தி 4 March 2017 3:30 AM IST (Updated: 3 March 2017 11:02 PM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம் செய்தனர்.

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தெருமுனை பிரசாரம் செய்தனர். பிரசாரத்திற்கு ஒன்றிய செயலாளர் மகாராஜன் தலைமை தாங்கினார். வெங்கடாசலம், பிச்சைபிள்ளை, உத்திராபதி ஆகியோர் பேசினர். மாநில குழு உறுப்பினர்கள் மாலதி சிட்டிபாபு, ஸ்ரீதர் மற்றும் மாவட்ட செயலாளர் மணிவேல், மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லாசர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும், மாற்றுத்திறனாளி, முதியோர், விதவைகளுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட நிர்வாகிகள் மீனா, பத்மாவதி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தனவேல் நன்றி கூறினார்.


Next Story