குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 18 மின் மோட்டார்கள் பறிமுதல்
தா.பழூர் ஒன்றியத்தில் குடிநீரை உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 18 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் வினியோகத்தை கண்காணிக்கவும் மற்றும் ஆழ்துறை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நீர்நிலைகள் ஆகியவை தூய்மையாக இருக்கிறதா?, மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என்பதை கண்காணிக்கவும் வருவாய்த்துறையில் வட்டாட்சியர்கள் மற்றும் வளர்ச்சித்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர்களை கொண்டு 48 ஊராட்சியில் 24 குழுக்கள் அமைக்கப்பட்டு, மேற்கண்ட அலுவலர்களுக்கு 7 முதல் 10 ஊராட்சிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த குழுவினர், அந்தந்த பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர்.
18 மின் மோட்டார்கள் பறிமுதல்
18 மின் மோட்டார்கள் பறிமுதல்
இந்நிலையில் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் மின் மோட்டார்களை வைத்து குடிநீர் உறிஞ்சியதை அக்குழுவினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து 18 மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். மேலும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
Next Story