விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
விருத்தாசலம்,
கொளஞ்சியப்பர் கோவில்விருத்தாசலம் அருகே உள்ள மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பொது மக்கள் தங்களது வேண்டுதல்களை தாளில் எழுதி பிராது கட்டினால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். அதனால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டி தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. முன்னதாக பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நெய்தீபம்தொடர்ந்து விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் மணவாளநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நெய்தீபம் ஏற்றி வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.