வாகன விபத்து வழக்கில் ஆவணங்களை பெறுவதற்கான வசதி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


வாகன விபத்து வழக்கில் ஆவணங்களை பெறுவதற்கான வசதி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 March 2017 4:00 AM IST (Updated: 4 March 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் வாகன விபத்து வழக்கில் ஆவணங்களை பெறுவதற்கான வசதியை போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

மென்பொருள் வசதி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 27 போலீஸ் நிலையங்களில் தினமும் பதிவாகும் வழக்குகள், புலனாய்வு உள்ளிட்ட அனைத்து விவரங்கள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழக்கு தொடர்பான பல்வேறு தகவல்கள் பெறும் வசதிகள் போலீஸ் துறை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக போலீஸ் நிலையங்களில் பதிவாகும் மோட்டார் வாகன சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்குரிய இழப்பீட்டை பெறவும், போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமான ஆவணங்களை பெறுவதற்கும் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதை சரி செய்யும் வகையில் ஐகோர்ட்டு வழிகாட்டுதல்படி போலீஸ்துறை இயக்குனரின் உத்தரவுபடி, கணினியில் அனைத்து ஆவணங்களும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. எனவே இழப்பீடு ஆணை வழங்கும் கோர்ட்டு, காப்பீட்டு நிறுவனங்கள், சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு நிவாரணம் கோரும் பொதுமக்கள் ஆகியோர் போலீஸ் துறை இணையதளத்தில் இருந்து உரிய ஆவணங்களை பெற்று கொள்ளும் வகையில் மென்பொருள் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் வாகன விபத்து வழக்கில் ஆவணங்களை பெறுவதற்கான புதிய மென்பொருள் வசதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தொடங்கி வைத்தார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவு இன்ஸ்பெக்டர் அருணாச்சலம், தாலுகா இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பிரேம்ஆனந்த், சப்–இன்ஸ்பெக்டர் ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story