அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு இலவச வாகன வசதி கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்


அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு இலவச வாகன வசதி கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 March 2017 2:45 AM IST (Updated: 4 March 2017 12:30 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு இலவச வாகன வசதியை கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.

நெல்லை,

அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் முடிந்து வீடு திரும்பும் பெண்களுக்கு இலவச வாகன வசதியை கலெக்டர் கருணாகரன் தொடங்கி வைத்தார்.

4 வாகனங்கள்

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தாய்– சேய் நல இலவச சேவை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகன சேவையை நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய் –சேய் இலவச பரிசு பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார்.

இதுகுறித்து கலெக்டர் கருணாகரன் கூறியதாவது:–

102 இலவச எண்

நெல்லை மாவட்டத்தில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் 4 தாய்– சேய் நல இலவச சேவை வாகனங்களை வழங்கி உள்ளது. இதில் ஒரு வாகனம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அம்பை, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தலா ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தை பெற வருகிற கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்றவுடன் 102 இலவச டெலிபோன் எண்ணுக்கு அழைத்து பேச வேண்டும். அந்த எண்ணில் எந்த அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது, எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

பரிசு பெட்டகத்துடன்

பின்னர் இலவச சேவை வாகனம் மூலம் தாய்– சேய் இருவரும் அவர்களது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்களுக்கு தமிழக அரசு மூலம் வழங்கப்படும் தாய்– சேய் பரிசு பெட்டகமும் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சேவை வாகனத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கருணாகரன் கூறினார்.

நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ், ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி டீன் சித்தி அத்தி முனவரா மற்றும் செஞ்சிலுவை சங்க தலைவர் சார்லஸ், முன்னாள் தலைவர் ஜெபசிங், செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் நயினாமுகமது, சுப்பிரமணி, அந்தோணிகுரூஸ் அடிகளார் உள்பட டாக்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story