கனரா வங்கி சார்பில் கடன்– நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்


கனரா வங்கி சார்பில் கடன்– நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 4 March 2017 4:00 AM IST (Updated: 4 March 2017 1:02 AM IST)
t-max-icont-min-icon

கனரா வங்கி சார்பில் ரூ.14 கோடி மதிப்பில் கடன்– நலத்திட்ட உதவிகள் கலெக்டர் டி.ஜி.வினய் வழங்கினார்

திண்டுக்கல்,

திண்டுக்கல் மண்டல கனரா வங்கி சார்பில், கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திண்டுக்கல் என்.எஸ். கம்யூனிட்டி ஹாலில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். மதுரை வட்ட கனரா வங்கி அலுவலக பொது மேலாளர் வேலுச்சாமி, மண்டல பொது மேலாளர் மணிவண்ணன், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் சஞ்சீவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், திண்டுக்கல் பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அமர்வதற்கான இருக்கைகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கு கல்வி நிதி உதவியை கலெக்டர் வழங்கினார்.

இதேபோல, நரிக்குறவ பெண்கள் தொழில் தொடங்குவதற்காக கடனுதவி மற்றும் பழனி அருகே உள்ள மானூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அம்பிகாவுக்கு மானியத்துடன் ஆட்டோ வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட தொழில் மையம், தாட்கோ, புதுவாழ்வு திட்ட பயனாளிகள் கடன் பெறுவதற்கான ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார். அதன்படி மொத்தம் ரூ.14 கோடியே 24 லட்சம் மதிப்பிலான கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், புதுவாழ்வு திட்ட மேலாளர் சுந்தரேஸ்வரன் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story