நடிகர் அஜித் நடித்த திரைப்படத்தை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டதை கண்டித்து போராட்டம்


நடிகர் அஜித் நடித்த திரைப்படத்தை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டதை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2017 2:00 AM IST (Updated: 4 March 2017 1:09 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் அஜித் நடித்த திரைப்படத்தை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டதை கண்டித்து பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடைபெற்றது.

பெங்களூரு,

நடிகர் அஜித் நடித்த திரைப்படத்தை கன்னடத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டதை கண்டித்து பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் நடைபெற்றது.

முற்றுகை போராட்டம்

நடிகர் அஜித் ‘என்னை அறிந்தால்‘ என்ற தமிழ் படத்தில் நடித்தார். அந்த படம் கன்னடத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ‘சத்தியதேவ் ஐ.பி.எஸ்.‘ என்ற பெயரில் கர்நாடகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 60 திரையரங்குகளில் இந்த படம் வெளியிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மாற்று மொழி படங்களை கன்னடத்தில் மொழி மாற்றம் செய்து வெளியிடக்கூடாது என்பதை வலியுறுத்தி கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூருவில் உள்ள கர்நாடக சினிமா வர்த்தக சபை அலுவலகத்தில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

பட காட்சிகள் ரத்து

இதில் கலந்து கொண்டவர்கள் வேறு மொழி படங்களை கன்னடத்தில் மொழி மாற்றம் செய்து திரையிடக்கூடாது என கோ‌ஷங்களை எழுப்பினர். இதேப் போல் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மங்களூரு, மைசூரு, மண்டியா, பெலகாவி உள்பட பல நகரங்களிலும் போராட்டம் நடந்தது. இதைதொடர்ந்து பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் அந்த திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

ஆனால் ஒரு சில நகரங்களில் அந்த படம் வெளியாகி ஓடுவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து வருகிற 9–ந் தேதி பெங்களூருவில் போராட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்து உள்ளார்.


Next Story