மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 March 2017 3:15 AM IST (Updated: 4 March 2017 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்,

கேரள முதல்–மந்திரி பினராயி விஜயனின் தலைக்கு ரூ.1 கோடி விலை வைத்த மத்திய பிரதேச ஆர்.எஸ்.எஸ். தலைவர் சந்திரவத்தை கைது செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் நேற்று மாலை திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பொங்கலூர் ஒன்றிய செயலாளர் பவித்ரா தலைமை தாங்கினார்.

தெற்கு நகர செயலாளர் ராஜகோபால், வடக்கு நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மாவட்ட செயலாளர் காமராஜ் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், மாதர்சங்கத்தினர், வாலிபர் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.


Next Story