கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு 9–ந் தேதி தொடங்குகிறது 6.84 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள்
கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு 9–ந் தேதி தொடங்குகிறது. 6.84 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு 9–ந் தேதி தொடங்குகிறது. 6.84 லட்சம் மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
பி.யூ. கல்லூரி பொதுத் தேர்வுகர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு வருகிற 9–ந் தேதி தொடங்குகிறது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து 6.84 லட்சம் மாணவ–மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதுகிறார்கள். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை செய்துள்ளது.
முதல் நாள் அதாவது 9–ந் தேதி விலங்கியல், வரலாறு, 10–ந் தேதி கணினி அறிவியல், 11–ந் தேதி அடிப்படை கணிதம், 13–ந் தேதி சமூகவியல், கணக்கு பதிவியல், 14–ந் தேதி கணிதம், 15–ந் தேதி கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, 16–ந் தேதி பொருளியல், 17–ந் தேதி இயற்பியல், 18–ந் தேதி உளவியல், 20–ந் தேதி வேதியியல், வணிகம், கன்னட விருப்ப பாடம், 21–ந் தேதி அரசியல் அறிவியல், 22–ந் தேதி இந்தி, தெலுங்கு, 23–ந் தேதி கன்னடம், தமிழ், மலையாளம், அரபிக், 24–ந் தேதி சமஸ்கிருதம், மராத்தி, உருது, பிரெஞ்சு, 25–ந் தேதி புவியியல், புள்ளியல், வீட்டு அறிவியல், 27–ந் தேதி ஆங்கிலம்.
மொத்தம் 998 மையங்கள்இது தொடர்பாக கர்நாடக பி.யூ. கல்லூரி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
கர்நாடகத்தில் பி.யூ. கல்லூரி 2–ம் ஆண்டு பொதுத் தேர்வு வருகிற 9–ந் தேதி தொடங்குகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 998 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் காலை 10.15 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 1.30 மணி வரை நடைபெறும். மொத்தம் 6 லட்சத்து 84 ஆயிரத்து 247 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
ஒரு தேர்வு மையத்தில் அதிகபட்சமாக ஆயிரம் பேர் அமர்ந்து தேர்வு எழுத வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். முறைகேடுகளுக்கு உதவும் கல்வி நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.