ஆவடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


ஆவடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 4 March 2017 3:16 AM IST (Updated: 4 March 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

ஆவடி சரஸ்வதி நகர் முல்லை தெருவில் வசித்து வந்தவர் குமார்(வயது 28). இவர், ‘வாஷிங் மிஷின்’ மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

ஆவடி,

ஆவடி சரஸ்வதி நகர் முல்லை தெருவில் வசித்து வந்தவர் குமார்(வயது 28). இவர், ‘வாஷிங் மிஷின்’ மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது சொந்த ஊர், திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் ஆகும். இவருடைய மனைவி சந்தியா(23). இவர்களுக்கு ஹர்திக் ரோஷன்(2) என்ற ஒரு மகன் உள்ளான்.

நேற்று காலை கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் சந்தியா, தனது மகனை தூக்கிக் கொண்டு கடைக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

கதவை தட்டியும் குமார் திறக்கவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் குமார், புடவையில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

Next Story