மும்பை மாநகராட்சி மேயர் தேர்தல்: தாதா அருண் காவ்லி மகள் பா.ஜனதாவுக்கு ஆதரவு


மும்பை மாநகராட்சி மேயர் தேர்தல்: தாதா அருண் காவ்லி மகள் பா.ஜனதாவுக்கு ஆதரவு
x
தினத்தந்தி 4 March 2017 3:17 AM IST (Updated: 4 March 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் தாதா அருண் காவ்லி மகள் கீதா காவ்லி பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாக அக்கட்சி தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பை மாநகராட்சி மேயர் தேர்தலில் தாதா அருண் காவ்லி மகள் கீதா காவ்லி பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாக அக்கட்சி தெரிவித்து உள்ளது.

மேயர் பதவி

227 வார்டுகளை கொண்ட மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 84 இடங்களில் வெற்றிபெற்ற சிவசேனாவும், 82 இடங்களை கைப்பற்றிய பா.ஜனதாவும் மேயர் பதவியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

தங்களது பலத்தை அதிகரித்து கொள்ளும் நோக்கில் அந்த இரு கட்சிகளும் சுயேச்சைகள் மற்றும் உதிரி கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகின்றன.

கீதா காவ்லி ஆதரவு

இந்தநிலையில், அகில பாரதிய சேனா கட்சி சார்பில் வெற்றி பெற்ற தாதா அருண் காவ்லியின் மூத்த மகள் கீதா காவ்லி நேற்றுமுன்தினம் சிவசேனா தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அனில்தேசாய் ஆகியோரை சந்தித்து பேசினார். இதன் காரணமாக அவர் சிவசேனாவுக்கு தனது ஆதரவை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேயர் தேர்தலில் கீதா காவ்லி பா.ஜனதாவை ஆதரிக்க முடிவு செய்து இருப்பதாக பா.ஜனதா மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘கீதா காவ்லி எங்களை(பா.ஜனதா) ஆதரிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே 3 கவுன்சிலர்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். எனவே மாநகராட்சியில் எங்களது கட்சியின் பலம் 86 ஆக உயர்ந்து உள்ளது’ என்றார்.


Next Story