தேர்வுக்கு 20 நிமிடத்திற்கு முன்பாக வாட்ஸ் அப்பில் பரவிய 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்


தேர்வுக்கு 20 நிமிடத்திற்கு முன்பாக வாட்ஸ் அப்பில் பரவிய 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்
x
தினத்தந்தி 4 March 2017 3:21 AM IST (Updated: 4 March 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு தொடங்க 20 நிமிடங்கள் இருந்த நிலையில் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் பரவியது.

மும்பை,

தேர்வு தொடங்க 20 நிமிடங்கள் இருந்த நிலையில் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் பரவியது.

வாட்ஸ் அப்பில் பரவியது

மராட்டியத்தில் தற்போது 12–ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த தேர்வு 28–ந்தேதி தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை மராத்தி தேர்வு நடந்தது. 2–ம் மொழிப்பாடத்திற்கு நடந்த இந்த தேர்வினை மாநிலம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதினர். மும்பையில் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இந்தநிலையில் தேர்வு தொடங்க சுமார் 20 நிமிடங்கள் இருந்த நிலையில் பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வாட்ஸ் அப்பில் பரவியது.

இதுகுறித்து மும்பை கல்வி மண்டல செயலாளர் சந்தேகரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– பொதுத்தேர்வு வினாத்தாள் பரவிய வாட்ஸ் அப் படங்கள் எங்களுக்கும் வந்தன. வினாத்தாள் பரவிய நேரத்தில் மாணவர்கள் தேர்வறைக்குள் சென்று இருப்பார்கள்.

எனினும் இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மேலும் வினாத்தாள் வாட்ஸ் அப்பில் பரவியது குறித்தும் விசாரித்து வருகிறோம். போலீசில் புகார் அளிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

3–வது ஆண்டாக...

கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுக்கு முன் பொதுத்தேர்வு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் பரவியது. இந்த ஆண்டு இதை தடுக்கும் வகையில் தேர்வு மையங்களுக்கு கண்காணிப்பாளர்கள் செல்போன் கொண்டு செல்லக்கூடாது என மாநில கல்வி வாரியம் உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் அதையும் மீறி தற்போது 3–வது ஆண்டாக வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியாகி உள்ளது அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story