விருகம்பாக்கத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் 14 பவுன் நகை பறிப்பு
விருகம்பாக்கத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் 14 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம மர்மநபர்கள்.
பூந்தமல்லி,
விருகம்பாக்கத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் 14 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 பவுன் நகை பறிப்பு
சென்னை விருகம்பாக்கம், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 48). நேற்று முன்தினம் இரவு இவர், கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.
வேம்புலி அம்மன் கோவில் தெரு வழியாக அவர் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், திடீரென மணிமேகலையின் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் நகையை பறித்து விட்டு வேகமாக தப்பிச்சென்றனர்.
மேலும் 2 பெண்களிடம்...
பின்னர் அதே மர்மநபர்கள், விருகம்பாக்கம் நடேசன் நகர், பச்சையம்மன் கோவில் தெருவில் நடந்து சென்ற கல்பனா(55) என்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தனர்.
தொடர்ந்து அதற்கு அருகில் உள்ள மற்றொரு தெருவில் நடந்து சென்ற சர்மிளா(38) என்ற பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் நகையையும் அதே நபர்கள் பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர்.
மர்மநபர்களுக்கு வலைவீச்சு
நகைகளை பறிகொடுத்த 3 பெண்களும் கூச்சலிட்டனர். ஆனால் அருகில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் மர்மநபர்களை பிடிக்க முடியவில்லை. இதுபற்றி 3 பெண்களும் விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒரே நாளில் அடுத்தடுத்து 3 பெண்களிடம் 14 பவுன் நகையை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்மநபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story