கும்மிடிப்பூண்டியில் சூதாட்ட தரகர்கள் 2 பேர் கைது


கும்மிடிப்பூண்டியில் சூதாட்ட தரகர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 March 2017 10:29 PM GMT (Updated: 2017-03-04T03:58:25+05:30)

கும்மிடிப்பூண்டியில் பல இடங்களில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனுக்கு புகார் சென்றது.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டியில் பல இடங்களில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சனுக்கு புகார் சென்றது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது காட்டன் சூதாட்டத்தின் தரகர்களாக காட்டுக்கொல்லை தெருவை சேர்ந்த விஜயன் என்ற விஜயகுமார் (வயது 37) மற்றும் கோட்டக்கரை நேதாஜி நகரை சேர்ந்த தனபால் (55) செயல்பட்டு வந்தது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story