திருவள்ளூர் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி சாவு
திருவள்ளூர் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் அருகே லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
லாரி மோட்டார் சைக்கிள் மோதல்
திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு சிகாமணி நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பரின் மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் இருளஞ்சேரி பிளேஸ்தோட்டம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு முன்னால் சென்ற லாரி திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.
இதில் வெங்கடேசனின் மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதியது.
சாவு
இதில் படுகாயம் அடைந்த வெங்கடேசனை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்து போனார்.
இது குறித்து மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜுலு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story