மீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்


மீஞ்சூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 3 March 2017 10:33 PM GMT (Updated: 2017-03-04T04:02:40+05:30)

அனுப்பம்பட்டு கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மீஞ்சூர்,

மீஞ்சூரை அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மது அருந்தக்கூடியவர்களால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், ரெயில் பயணிகள், கல்லூரி மாணவிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு பலமுறை விண்ணப்பம் செய்தும் பயனில்லை. இந்த நிலையில் அனுப்பம்பட்டு கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனை அறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story