குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு


குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 4 March 2017 4:08 AM IST (Updated: 4 March 2017 4:07 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி பரிந்துரையின் பேரில் பாலமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டார்.

வாலாஜாபாத்,

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி கோவில்பதாகை பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவரது மகன் பஞ்ச் பாலா என்கிற பாலமுருகன் (வயது 26). இவர் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் வழிப்பறி, நகைபறிப்பு, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இவர் மீது சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி பரிந்துரையின் பேரில் பாலமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. 

Next Story