விழுப்புரம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கு 116 வாக்குச்சாவடிகள் அமைப்பு


விழுப்புரம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கு 116 வாக்குச்சாவடிகள் அமைப்பு
x
தினத்தந்தி 16 March 2017 4:15 AM IST (Updated: 16 March 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தலுக்கு 116 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விழுப்புரம்,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடி அமைப்பது குறித்து நேற்று மாலை அனைத்துக்கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுரேந்தர் தலைமை தாங்கினார். அதிகாரிகள் ராஜா, மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் வக்கீல் செந்தில், தி.மு.க. சார்பில் நகர தலைவர் சக்கரை, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர நிர்வாகி இரணியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வாக்குச்சவாடி பட்டியல்

கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் சுரேந்தர் கூறுகையில், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு நகரிலுள்ள 42 வார்டுகளிலும் 116 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஆட்சேபனை எதுவும் இருந்தால் நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் ஆஜராகி தெரிவிக்கலாம். இல்லையென்றால் இறுதி வாக்குச்சாவடி பட்டியல் உறுதி செய்யப்படும் என்றார்.


Next Story